திடீரென மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி

திடீரென மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமி

1 mins read

மதுரை: திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தனியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அவர் வழக்கு தொடுத்துள்ளார். அது தொடர்பான விசாரணைக் காக நேற்று முன்தினம் மதுரைக்கு வந்த அவர், அங்குள்ள தெற்கு மாசி வீதிக்குச் சென்றிருந்தார். அங்கு பாஜக நிகழ்ச்சிக்காக சில பதாகைகள் வைக்கப்பட்டி ருந்தன. அவற்றைக் கண்டு ஆவேசம் அடைந்த அவர், உடனடி யாக அவற்றை அகற்றக் கோரி அங்கேயே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பதாகைகள் முன்னே சாலையில் அமர்ந்திருந்த அவர் திடீரென மயங்கிச் சரிந்தார். இதையடுத்து அவரை அங்கி ருந்த பொதுமக்கள் மீட்டு தனி யார் மருத்துமனையில் சேர்த்தனர். கடும் வெயிலால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும், ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.