நாகர்கோவில்: மத்திய வரவு செலவு நிதி அறிக்கையில் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். நாகர்கோவிலில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், மத் திய அரசின் தவறான பொருளா தார கொள்கையால்தான் பெட் ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதாகக் குறை கூறினார். "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது.
ஆனால் இதுவரை தொடங்கவில்லை. "தமிழை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என நாடாளுமன்றத்தில் அமைச்சர் கூறியுள்ளார். தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக் கும் போது தமிழ் வழக்காடு மொழியாக ஏற்கப்படும்," என்றார் திருமாவளவன். போராட்டங்களில் ஈடுபடும் சிறுவர்களைக் கைது செய்வது கண்டனத்துகுரியது என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ரவுடித்தனமும் கூலிப்படைக் கலாசாரமும் அதிகரித்து இருப்பது வேதனை அளிப்ப தாகக் கூறினார்.
"கூலிப்படைக் கலா சாரத்தை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். "பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாகவே விலை வாசி உயர்கிறது. எனவே அவற்றின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்," என்றும் திருமாவளவன் மேலும் சுட்டிக் காட்டினார்.

