சென்னை: தமிழகத்தில் இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி நிய மனத்தில் முறைகேடு நடைபெற் றுள்ளதாக பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியா ளர்களிடம் பேசிய அவர், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமக்குரிய பதவி மறுக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். தற்போதைய ஆட்சியில் பிற் படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எந்தப் பதவி யும் வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், ஜெய லலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.
"பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கான அழைப்பா ணையை அரசு வெளியிட்டிருந் தது. அதன்படி குறித்த காலத் தில் நான் விண்ணப்பித்து இருந்தேன். விண்ணப்ப காலம் முடிவடையும் வரை 13 விண் ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.
புஷ்பவனம் குப்புசாமி, அனிதா தம்பதியர் படம்: இணையம்

