கடலில் பாதுகாப்பை உறுதி செய்யும் கருவி: இஸ்ரோ சிவன் தகவல்

கடலில் பாதுகாப்பை உறுதி செய்யும் கருவி: இஸ்ரோ சிவன் தகவல்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: சந்திரயான்-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்துப் பணிகளும் நடந்துகொண்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான 'இஸ்ரோ'வின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பாது காப்பை உறுதி செய்யும் கருவி தொடர்பான சோதனை வெற்றி அடைந்துள்ளதாகக் குறிப்பிட் டார்.

"மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது அவர்கள் இருக் கும் இடம், எவ்வளவு தொலை வில் உள்ளனர், பாதுகாப்பு எல்லையில் இருக்கிறார்களா?

என அனைத்தையும் தெரிவிக் கும் வகையில் செயற்கைக்கோள் மூலம் இயங்கக் கூடிய உயர் தொழில்நுட்பக் கருவி உருவாக் கப்பட்டு உள்ளது. அந்தக் கருவியின் சோதனையும் வெற்றிகர மாக முடிந்து உள்ளது," என்றார் சிவன்.

முதற்கட்டமாக 500 மீனவர் களுக்கு அக்கருவியை வழங்க திட்டமிட்டுள்ளதாகக் குறிப் பிட்ட அவர், அனைத்து மீனவர் களுக்கும் பாதுகாப்புக் கரு வியை வழங்குவது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.