புதுச்சேரி: காவிரி நதிநீர் பிரச்சி- னையில் உச்ச நீதிமன்றம் அளித்- துள்ள தீர்ப்புக் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தி- யாளர்களிடம் பேசினார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்- பாக உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடை பெற்ற வழக்கில், புதுச்சேரி மாநி லத்தின் கோரிக்கை யான 7 டி.எம்.சி. தண்ணீர் உறுதி செய் யப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், தமிழ கத்திற்கு எவ்வளவு நீர் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. காரைக்கால் கடைமடைப் பகுதியாக உள்ள இடம். எனவே அங்குள்ள விவசாயிகள் வெள்ளத் தின் போதும், வறட்சியின்போதும் பாதிக்கப்படுவார்கள். 7 டி.எம்.சி. தண்ணீர் முறையாக கிடைக்கும் பட்சத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விவசாயம் செய்வதற்- கான வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறோம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்க- ளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரையில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். கடந்த இரண்டு ஆண்டாக காரைக் காலில் விவசாயம் பொய்த்த காரணத்தால், நிவார- ணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுக்குப் பயிர்க் காப்பீடு திட்டம், விவசாயக் கடன் தள்ளு- படி, வறட்சி நிவாரணம் என 3 விதமான சலுகைகளை வழங்கி- னோம். இந்தியாவில் எந்த மாநிலத்- திலும் இல்லாததைப்போல் புதுச்- சேரி, காரைக்கால் விவசாயி- களுக்கு மறுபடியும் விவசாயம் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.
தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மிக, மிக அவசியம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழு- மையாக நிறைவேற்ற வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும். மழைவரும் காலங்களில், மழை- யில்லாக் காலங்களில் எந்தெந்த அளவு தண்ணீர் கொடுக்க வேண்- டும் என்று தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள அம்சத்தை காவிரி மேலாண்மை வாரியம்தான் அமல்படுத்த வேண்டும். எனவே இனியும் கர்நாடகத்தை நம்பி இருக்காமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

