அமிர்தலா: நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பங்ளாதேஷ் எல்லை யில் திரிபுரா மாநிலம் அமைந்துள் ளது. இதன் மூன்று திசையில் பங்ளாதேஷும் ஒரு பகுதியில் மிசோரம், அசாம் மாநிலங்களும் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் வங்காள மொழி மற்றும் காக்பரோக் என்ற வட்டார மொழி பேசுகிறார் கள். 1972ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி திரிபுரா மாநிலம் உருவாக்கப்பட்டது.
தொடக்கத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த திரிபுராவில் முதல் முறையாக 1978ஆம் ஆண்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சியைப் பிடித்தது. நிரூபன் சக்ரவர்த்தி முதலமைச்- சர் ஆனார். 1988 வரை 10 ஆண்டு காலம் அவர் முதல்வராக இருந்தார். அதன்பிறகு மீண்டும் காங் கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அடுத்து நடந்த 1993ஆம் ஆண்டு தேர்த லில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு மீண்டும் ஆட்சிக்கு வந் தது. தசரத தேவ் முதல்வரானார். தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.
தற்போதைய முதல்வர் மாணிக் சர்க்கார் 1998ஆம் ஆண்டு முதல் கடந்த 20 ஆண்டுகளாக முதல்வ- ராக இருந்து வருகிறார். மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட திரிபுரா சட்டமன்றத்தில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக் குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 25.33 லட்சம் வாக்காளர் கள் வாக்களிக்க உள்ளனர்.

