பெங்களூரு: 'மோடி கேர்' என்றழைக்கப்படும் தேசிய சுகா தாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற் கும் சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. மாநில அரசின் உதவியுடன் இவ்வாண்டிற்குள் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் இருந்து விலகுவதாக முதலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் 'மோடி கேர்' திட்டத்தில் இணைய மறுத்து உள்ளார். இவர்கள் இருவரும் தங்களது மாநிலத்தில் ஏற்கெனவே காப்பீட்டுத் திட்டம் உள்ளதாகக் கூறியுள்ளனர்.
மோடி காப்பீட்டுத் திட்டத்தில் இணைய கர்நாடகாவும் மறுப்பு
1 mins read

