புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுத் தாக்கலின்போது தங்கள் சொத்துகள் மற்றும் மனைவி, பிள்ளைகளின் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. இதில் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு எப்படி வருவாய் கிடைக்கிறது என்பதை குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை.
இதில் மாற்றம் கொண்டு வரக் கோரி லக்னோவைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு, "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமின்றி அவரது மனைவி அல்லது கணவர், பிள்ளைகள் மற்றும் தங்களைச் சார்ந்திருப்பவர்கள் தங்கள் வருமானத்திற்கான மூலத்தைக் தெரிவிக்கவேண்டும்," என்று உத்தரவிட்டது.

