ராமநாதபுரம்: விவசாயிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்புக் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கைவிடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிக ளிலும் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படுத்தி வரும் திட்டங்க ளுக்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி இடையே குழாய் மூலம் இயற்கை எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத் துவதற்காக குளத்தூர் பகுதியில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடை பெற்றது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களும் விவ சாயிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டம் தொடங்கிய அடுத்த நிமிடமே இப்படி ஒரு திட்டம் தங்களுக்குத் தேவையில்லை என விவசாயிகள் குரல் கொடுத்தனர். பொதுமக்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவே, போலிசார் தலையிட்டுச் சமாதானப்படுத்த முயன்றனர். "ராமநாதபுரமும் தூத்துக்குடியும் மானாவாரி விவசாயம் நிறைந்த பகுதிகள். அதனால் இங்குள்ள விவசாயிகளைச் எளிதாக ஏமாற்றி விடலாம் என்று நினைத்துவிட்ட னர். ராமநாதபுரம் ஓஎன்ஜிசி எரிவாயு சேமிப்பு நிலையத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுப் பதற்காக இத்திட்டம் செயல்படுத் தப்படவில்லை.
எதிர்ப்புக்குரல் எழுப்பும் விவசாயிகள். படம்: தகவல் ஊடகம்

