புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி முழுவதும் 2017- 18ஆம் ஆண் டில்தான் நடை பெற்றிருப்பது, சிபிஐ பதிவு செய் துள்ள முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தொழிலதிபர் நீரவ் மோடி தொடர்புடைய இந்த மோசடி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே (2011) தொடங்கிவிட்டதாக மத் திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் குற்றம்சாட்டி வரும் நிலையில், சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையோ அதற்கு மாறாக உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி நடை பெற்றதாக அளிக்கப்பட்ட புகார் களின் அடிப்படையில் இரு வழக் குகளைச் சிபிஐ பதிவு செய்துள் ளது. இதுதவிர மேலும் சில அதி காரிகளும் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

