கர்னூல்: ஒரு கொலை வழக்கின் தொடர்பில் ஆந்திர துணை முதல்வர் மகனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் செருகுலபாடு நாராயண ரெட்டி யின் கொலை வழக்கில், அம்மாநில துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தியின் மகன் ஷியாம் பாபு வுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செரு குலபாடு நாராயண ரெட்டி. இவர் அங்குள்ள பத்திகொண்டா தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங் கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் இவரும் இவருடைய நண்பரும் காரில் சென்றபோது மர்மக் கும்பல் ஒன்று நாராயண ரெட்டியை சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்த வழக்கு விசா ரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அம்மாநில துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி யின் மகன் ஷியாம் பாபுதான் நாராயண ரெட்டியைக் கொலை செய்ததாக செய்திகள் வந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷியாம் பாபு, காவல்துறை சப் இன்ஸ்பெக் டர் நாகபிரசாத், பொஜ்ஜம்மாள் ஆகியோருக்கு அழைப்பாணை உத்தரவு பிறப் பித்துள்ளது.
அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள ஷியாம் பாபு (சிவப்பு வட்டத்தில்). படம்: ஊடகம்

