திருமணத்தில் சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்தது: உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு

திருமணத்தில் சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்தது: உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு

1 mins read
eb231e46-f332-41aa-a1f5-630cff5d7020
-
Google News Preferred Icon

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம், பெவாரில் உள்ள பிரபல ஹோட்ட லில் திருமண விழா வெள்ளியன்று இரவு நடைபெற்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியதில் மூன்று மாடி ஹோட்டல் இடிந்து விழுந்ததுடன் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சில கார்களும் ஹோட்டலின் அருகே இருக்கும் கட்டடங்களும் சேத மடைந்தன. மீட்புப் படை வீரர்கள் நேற்று ஒன்பது உடல்களைத் தேடி கண்டு பிடித்தனர். முன்னதாக வெள்ளி யன்று நிகழ்ந்த இந்த விபத்தில் 9 பேர் பலியானதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "இதுவரை 18 உடல்கள் மீட்கப் பட்டுள்ளன," என்று அஜ்மீரைச் சேர்ந்த மூத்த நிர்வாக அதிகாரி கவ்ரவ் கோயல் கூறினார்.

திருமண விழாவில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவ வீரர்கள், போலிஸ் படையினர், அவசர கால சேவை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி