பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்

பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்

1 mins read
59af3180-05e4-4f10-a1b7-fab1ac44900b
-

ரேவா: மத்தியப்பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் மாணவர்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் இருந்த பள்ளிக் கழிவறை ஒன்றை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெறும் கையால் சுத்தம் செய்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த ஜனார்த்தன் மிஸ்ரா, மத்தியப் பிரதேசத்தின் ரேவா தொகுதி எம்.பி.யாகப் பதவி வகித்து வருகிறார். அந்த தொகுதியில் உள்ள கஜூவா கிராமத்தின் பள்ளியைக் கடந்த 15ஆம் தேதி ஆய்வு செய்தபோது பள்ளியில் இருந்த கழிவறை பராமரிப்பின்றி காணப்பட்ட தால் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

இதை அறிந்த மிஸ்ரா அந்தக் கழிவறையைச் சுத்தம் செய்ய களமிறங்கினார். அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதை விடுத்து, அவரே நேரடியாகக் களமிறங்கி அந்தக் கழிவறையைச் சுத்தம் செய்தார். வெறும் கையால் கழிவறையை பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா சுத்தம் செய்வது போன்ற காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யும் பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா. படம்: ஊடகம்