"அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறான ஆட்சி" தூத்துக்குடி: பாஜக தலைமையி லான மத்திய அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு நேர் மாறாக ஆட்சி செய்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சாடியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில மாநாட்டைத் தொடங்கிவைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசுக்கு எதிராக விவசா யிகள், தொழிலாளர்கள், பழங்குடி யினர் என்று அனைத்து தரப்பின ரும் இணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தினார்.
"தமிழகத்தில் உள்ள இரு முக் கிய திராவிட கட்சிகளில் ஒன்று குழப்பத்தில் உள்ளது. மற்றொன்று தேக்க நிலையில் உள்ளது. இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழ கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொண்டர்கள் பலப் படுத்த வேண்டும்," என்றார் பிரகாஷ் காரத். திமுக, அதிமுகவை மறை முகமாகக் குறிப்பிட்டே அவர் இவ் வாறு குறிப்பிட்டதாகத் தெரிகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் அக்கட்சிக்கு எதிரான போராட் டங்கள் தீவிரமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச் சியைப் பாதிக்கும் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருமுன் அனைத்து துறைகளிலும் ஊழலற்ற ஆட்சி என்ற வாக்குறு தியை மக்களுக்கு அளித்திருந் தது. ஆனால், அதற்கு நேர்மாறான விஷயங்களே நடக்கின்றன. "பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து பொதுமக்களின் பண மான ரூ.11 ஆயிரம் கோடி மோசடி யில் நீரவ் மோடி ஈடுபட்டுள்ளதும், 36 போர் விமானங்களை பிரெஞ்சு நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு வாங்கியதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன," என்றார் பிரகாஷ் காரத். மக்கள் எழுப்பும் கேள்விக ளுக்குப் பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வங்கிகளில் கோடிக்கணக் கில் மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்.

