நடுச்சாலையில் பற்றி எரிந்த லாரி

நடுச்சாலையில் பற்றி எரிந்த லாரி

1 mins read
Google News Preferred Icon

திருவள்ளூர்: சோழவரம் அருகே சென்று கொண்டிருந்த கொள்கலன் லாரியின் சக்கரத்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த லாரியில் இருநூறு பேரல்களில் 2 ஆயிரம் லிட்டர் இன்ஜின் ஆயில் ஏற்றப்பட்டு இருந்தது. சக்கரத்தில் இருந்து பரவிய தீ, பேரல்களிலும் பற்றிக்கொண்டதால் ஒட்டுமொத்த லாரியும் எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதன் அருகே வாகனங்களில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பல வாகனங்கள் சாலையில் அப்படியே நிறுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.