பயங்கரவாதம் வேரோடு அறுக்கப்பட வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

பயங்கரவாதம் வேரோடு அறுக்கப்பட வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

1 mins read
8912e801-4e01-4982-919c-a34ef4caaec5
-

சென்னை: பயங்கரவாதம் என் பது வேரோடு அறுக்கப்பட வேண் டிய ஒன்று என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், உலக அளவில் பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்திய அரசுகள் எல் லாம் எவ்வாறு கலைக்கப்பட்டன என்ற வரலாறு அனைவருக்கும் தெரியும் என்றார். "மதத்தின் மூலம் மக்களைத் துண்டாடி, மதவாத அரசியல் செய்து பிளவு ஏற்படுத்தினால் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். இதில் தமிழக அரசுக்கு எந்தவித தயக்கமும் இல்லை," என்றும் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் கூறினார்.

இதற்கிடையே மதவாத பாஜ கவை வீழ்த்துவதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் நல்லகண்ணு அழைப்பு விடுத்துள்ளார். நாடு தற்போது பெரும் அபா யத்தில் சிக்கியுள்ளதாக சென் னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

மதவாத சக்திகளின் கரங்க ளில் அதிகாரம் இருப்பதால் ஜன நாயகம், மதச்சார்பின்மை, சமத் துவம், சமூக நீதிக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்த அவர், அதிமுக அரசு மத்தியில் உள்ள மதவாத பாஜக அரசின் கைப்பாவையாக மாறி விட்டதாக விமர்சித்தார்.