காஞ்சிபுரம்: தனியார் பேருந்துடன் வேன் மோதிய கோர விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 பேர் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிறிய ரக வேனில் சென்று கொண்டிருந்தனர். சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள தாமல் பகுதியை நெருங்கிய போது எதிரே வந்த தனியார் பேருந்து பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேனில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே ஆண் குழந்தை ஒன்றும் எட்டு பெண்களும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மற்ற அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனியார் பேருந்து, வேன் மோதி விபத்து: 8 பெண்கள், ஆண் குழந்தை பலி
1 mins read

