கோவை: ஆந்திர மாநிலத்தில் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் காவல்துறையினரால் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவ தாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கவலை தெரிவித் துள்ளார். கோவையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், ஆந்திர மாநில ஏரியில் ஐந்து தமிழர்கள் சட லமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார். "அந்த 5 தமிழர்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டார் களா என்ற சந்தேகமும் எழுந் துள்ளது. எனவே, இந்தச் சம்பவம் தொடர்பான சந்தேகம் நீடிக்கும் பட்சத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்," என வைகோ வலியுறுத்தினார்.
இவ்விவகாரம் குறித்து ஆந்திர அரசிடம் விளக்க அறிக்கை பெற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உலகம் முழுவதும் தமிழர் கள் மீது தாக்குதல் நடத்தப் படுவதாக வேதனை தெரிவித்தார். மதிமுக தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை முதல்வர் ஆக வேண்டுமென்ற ஆசை தமக்கு வந்ததே இல்லை என்று குறிப் பிட்ட அவர், மதிமுகவை தொடங் கியதில் இருந்து இதுவரை எந்த இடத்திலும் தம்மை முன்னிறுத்திக் கொண்டதே இல்லை என்றார். தமிழகத்தில் இலங்கை அகதி கள் முகாம் என்பதே இல்லாமல் போக வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அகதிகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.

