சென்னை: அரசியல் வாழ்வில் மகிழ்ச்சித் தென்றலும், நெருக் கடிப் புயலும் மாறி மாறி வந்து போகும் என திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். கட்சித் தொண்டர் களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன் றில், திமுக தலைமையகமான அறிவாலயத்தை அதன் பெயருக் கேற்ப அனுதினமும் தொழுதிடும் கோவிலாக கட்சியினர் நினைப்ப தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எளியவர்களாக இருந்தாலும் கறுப்பு, சிவப்பு கரைவேட்டி அணி வதில் திமுகவினர் கம்பீரத்தை வெளிப்படுத்துவதாக பெருமிதத் துடன் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், பல லட்சம் குடும்பங்கள் ஒன்றி ணைந்து பாடுபடும் கட்சிதான் திமுக என்று கூறியுள்ளார். "தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் மலரும். மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் திமுக ஆயிரங்காலத்துப் பயிர்.
"திமுக பேரியக்கத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது. திராவிட மொழிப் பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட் டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. அந்த ஜீவாதாரப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக, கோடித் தொண்டர்களில் முன் னிற்கும் தொண்டனாக நான் இருக்கிறேன்," என்று மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப் பிட்டுள்ள அவர், நிர்வாகிகளுட னான ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறி உள்ளார்.
இந்நிலையில் அரசியல் களம் காணவிருக்கும் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கு மக்களிடம் இருக்கும் மவுசு குறித்து ஆய்வுநடத்தும்படி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக நாளேடு ஒன்று செய்தி வெளி யிட்டிருந்தது. ஆனால், பல ஆண்டு காலமாக வேரூன்றி இருக்கும் பெரிய கட்சிகளைப் பாதிக்காது என்று அரசியல் நிபுணர்கள் சிலர் கருத்துத் தெரிவி த்துள்ளனர்.

