என்னை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு

என்னை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு

2 mins read
f2e64889-77a2-497c-8dad-129d0514acfa
-

சென்னை: ஆயுள் தண்டனைக் கைதிகளை அரசியலமைப்புச் சட்ட விதியின்படி முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுக்கு போதிய அதிகாரம் உள்ளது என நளினி கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி உள்ளிட்டோர் தங் களை விடுதலை செய்ய வேண்டு மெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக நளினி, தனது விடுதலைக்காகத் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆயுள் தண் டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார் நளினி. அவர் தாக்கல் செய்துள்ள மனுவுக்குப் பதில் அளிக்க வேண் டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. "ஆயுள் தண்டனைக் கைதி களை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-ன்படி முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுக்குப் போதிய அதிகாரம் உள்ளது. ஆனால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435 (1)-ன்படி, சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் ஆயுள் தண்டனை பெற்ற என்னைப் போன்ற கைதி களை மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது எனத் தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

"இது மாநில அரசின் இறையாண்மைக்கும் அதிகாரத் திற்கும் எதிராக உள்ளன," என்று நளினி தமது மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார். ஆயுள் தண்டனைக் கைதி களை முன்கூட்டியே விடுதலை செய்யும்போது அவர்களின் நன்ன டத்தை மற்றும் ஏற்கெனவே அனு பவித்த தண்டனைக் காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மறுவாழ்வு அளிப்பதற்காகத் தான் கைதிகளை அரசு விடுதலை செய்கிறது எனவும் தெரிவித்துள் ளார். கைதிகள் மத்தியில் இது போன்ற பாகுபாடுகளைப் பார்க்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.