ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 83 வயது முதியவர் ஒருவர் 30 வயது பெண்ணை தனது சொத்துக்கு வாரிசாக ஒரு மகன் வேண்டும் என்ற காரணத்திற்காகத் திருமணம் செய்துள்ளார். அவர் திருமணம் செய்துள்ள புதுப்பெண்ணின் பெயர் ரமேஷி. மணமகனை விட 53 வயது இளையவர். திருமணத்தின் போது மணமகன் பெண்ணின் கிராமத்திற்கு வந்தவுடன் கிராம மக்கள் பாட்டு பாடி நடனம் ஆடினர். மணமகனின் மகளும் மருமகனும் கூட இந்த திருமணத்தில் ஆட்டத்துடன் பாட்டு பாடினர். இந்தத் திருமணம் அவரது முதல் மனைவி முன்னிலையில் நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுக்ராம் பைரவா. வயது 83. ஏராளமான சொத்துகளுக்குச் சொந்தக்காரர்.
இவருக்கு ஏற்கெனவே திருமணம் நடைபெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாவதாக 30 வயது இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் பைரவாவின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். சுக்ராம் பைரவாவுக்கு முதல் மனைவி மூலம் ஓர் ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தை களும் பிறந்துள்ளனர். ஆனால் சுக்ராம் பைராவின் மகன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் குணப்படுத்த முடியாத நோயால் உயிரிழந்துவிட்டார். இரண்டு மகள்கள் மட்டும் தற்போது உள்ளனர். அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது. மகனின் மரணத்திற்குப் பின் மூதாதையர் சொத்து களை எல்லாம் சுக்ராம் பைரவாவே கவனித்து வந்துள்ளார். இதனிடையே, தனது சொத்துகளைக் கவனித்துக்கொள்ள ஒரு மகன் வேண்டுமென்றும் அதற்காகத் தான் இரண்டாவது திருமணம் ஒன்றை செய்துகொள்ளப்போவதாகவும் சுக்ராம் பைரவா தனது முதல் மனைவியிடம் தெரிவித்திருக்கிறார். அவரும் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததால் பைரவாவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
ஆண் குழந்தை வேண்டும் என்பதற் காக 83 வயது முதியவர் 30 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மூத்த மனைவியை விவகாரத்து செய் யாமல் இரண்டாவது திருமணம் செய் துள்ளதால் சுக்ராம் பைரவாவின் திருமணம் சட்ட விரோதமானது என்று அப்பகுதி மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. படம்: ஊடகம்

