ரஜினி மனைவிக்கு நீதிமன்றம் கெடு

1 mins read

சென்னை: 'கோச்சடையான்' திரைப்படத் தயாரிப்புக்காக பெற்ற கடன் தொகையை 12 வாரங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும் என நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'கோச்சடையான்' படத்தைத் தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் பெற்ற லதா ரஜினிகாந்த், அதில் ரூ.1.5 கோடி மட்டுமே திருப்பித் தந்துள்ளார். மீதமுள்ள தொகையை செலுத்தாததால் அந்நிறுவனம் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எதனால் கடனைத் திருப்பிக் கொடுக்கவில்லை? எனக் கேள்வி எழுப்பியது. பிறகு கடனை அடைக்கவும் உத்தரவிட்டது.