கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்த திமுகவின் தீவிர விசுவாசி மூதாட்டி பாப்பாத்தி

கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்த திமுகவின் தீவிர விசுவாசி மூதாட்டி பாப்பாத்தி

1 mins read
8b16bed8-b259-4250-8921-b162cf9b024f
-

சென்னை: திமுகவின் தீவிர விசுவாசியான 74 வயது மூதாட்டி பாப்பாத்தி அம்மாளுக்கு தேநீர் விருந்தளித்து கௌரவித்துள்ளார் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதியையும் அம்மூதாட்டி சந்தித்து நலம் விசாரித்தார். ஈரோட்டைச் சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள். திமுக ஆதரவா ளராக இவர், அண்மையில் அறிவா லயம் வந்திருந்தார். எனினும் அச்சமயம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த தால் மு.க.ஸ்டாலி னால் இவரைச் சந்திக்க முடிய வில்லை.

இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவர் நெகிழ்ச்சியாகப் பேசும் காணொளி ஒன்று ஊடகங்களில் வெளியா னது. அதில், பலமுறை முயற்சி செய்தும் ஸ்டாலினை தம்மால் சந்திக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார் பாப்பாத்தி. இது குறித்து தகவலறிந்த ஸ்டாலின், உடனடியாக அம் மூதாட்டியை அறிவாலயத்துக்கு அழைத்துவர ஏற்பாடு செய்தார். இதையடுத்து தன் வீட்டிற்கும் அழைத்து தேநீர் விருந்தளித்தார்.

"அந்த அம்மையாரை தலைவர் கலைஞர் அவர்களிடமும் நேரில் அழைத்துச்சென்று அறி முகப்படுத்தினேன். அந்த அம்மை யார் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சியும், அவரைப் போன்ற பயன்கருதா தொண்டர்களின் இயக்கப் பற் றுமே, திமுகவுக்கு நாளும் வலு சேர்க்கிறது," என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாப்பாத்தி அம்மாளுடன் அவர் செல்ஃபி எடுக்கும் காணொளி ஒன்று திமுக தலைமைக் கழகத்தால் வெளியிடப் பட்டுள்ளது.