கருணை இல்ல மர்மம்: மாதந்தோறும் ஐம்பது முதியோர் மரணம்

கருணை இல்ல மர்மம்: மாதந்தோறும் ஐம்பது முதியோர் மரணம்

2 mins read

காஞ்சிபுரம்: ஆதரவற்ற முதியோர்க ளுக்கான கருணை இல்லத்தில் மாதந்தோறும் சுமார் 50 பேர் தொடர்ந்து மரணமடைந்தது பல் வேறு சந்தேகங்களையும் அதிர்ச்சி யையும் ஏற்படுத்தி உள்ளது. அக் குறிப்பிட்ட இல்லம் மாவட்ட நிர்வா கத்தின் அனுமதி இன்றி செயல் பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான அந்த கருணை இல்லம் இயங்கி வருகி றது. அங்கு 300க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கி உள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே இந்த இல்லம் குறித்து பல்வேறு அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இல்லத் தில் உள்ள ஆதரவற்ற முதியோர் கள் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் கடத்தப்படுவதாக பகீர் தகவல் வெளியானது. மேலும் மாதந்தோறும் குறைந்த பட்சம் 40 முதல் 50 முதியோர்கள் வரை உயிரிழப்பதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவிதத் தகவலும் தெரிவிக்கப் படுவதில்லை என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை கருணை இல்லத்தில் அரசு அதி காரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது பல அதிர்ச்சி தக வல்கள் தெரிய வந்தன. தாமாக வந்து சேரும் ஆதரவற்ற முதியோர் மட்டுமல்லாது பல்வேறு ஊர்களில் இருக்கும் அனாதைகளையும் இந்த இல்லத்து நிர்வாகிகள் அழைத்து வந்து இங்கு தங்க வைத்துள்ளனர். இல்லத்திற்குள் ளேயே ஒரு கிடங்கு அமைத்து இறந்தவர்களின் உடலை அங்கு போட்டு வைத்ததாகவும், இறந்த வர்களின் எலும்புகளை என்ன செய்கிறார்கள் என்பது தெரிய வில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.