பாஜகவின் அவதூறு பிரசாரத்தால் உயிருக்கு ஆபத்து: உதயகுமாரன்

பாஜகவின் அவதூறு பிரசாரத்தால் உயிருக்கு ஆபத்து: உதயகுமாரன்

2 mins read
96db4944-884d-4b21-b2b8-f13655a2c61e
-

குமரி: சரக்குப் பெட்டக துறை முகம் என்கிற பெயரில் குமரி முனையில் ஓர் அழிவுத் திட் டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன் குற்றம்சாட்டி உள்ளார். தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தான் பொறுப்பு என்று அவர் தெரிவித் துள்ளார். நேற்று முன்தினம் கன்னியா குமரி ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனுவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "சரக்கு பெட்டக துறைமுகத் திட்டத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே இது குறித்து தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருகிறேன்.

"இந்தத் திட்டத்துக்கு எதி ரான போராட்டக் குழுவில் நான் தலைவராகவோ உறுப்பினராகவோ இருக்கவில்லை. ஆனால், துறை முக ஆதரவுக் குழுவின் தலைவ ரான வேல்பாண்டியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் உள்ளிட்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எனக்கு எதிரான அவதூறுப் பிரசாரத்தை மாவட்டம் முழுவதும் செய்து வருகிறார்கள்," என்று உதயகுமா ரன் சாடியுள்ளார்.

துறைமுக ஆதரவு வாகனப் பிரசாரம் என்கிற பெயரில் பல பகுதிகளில் பேச்சாளர்கள் தமது பெயர் உட்பட மேலும் சிலரைக் குறிப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுவதாக தெரிவித்துள்ள அவர், தம்மைப் பற்றி அவதூறாகப் பேசி, சுவரொட்டிகளை ஒட்டி வருபவர் கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். "எங்களைப் பற்றி அவதூறு பரப்பப்படுவதால், நாங்கள் வசிக்கும் பகுதியில் காவல்துறை யின் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் எங்களது வசிப்பிடங்களில் போலி சார் கூடுதல் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட வேண்டும். "எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் தான் பொறுப்பேற்க வேண் டும்," என உதயகுமாரன் மேலும் தெரிவித்துள்ளார்.