தூத்துக்குடி: மத்தியில் உள்ள பாஜக அரசு மாநில உரிமைகளைத் தொடர்ந்து பறித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் நடை பெற்ற அக்கட்சியின் தமிழக மாநில மாநாட் டுக்குப் பின் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், உரிமைகள் பறிக்கப் படுவதை அடுத்து கேள்வி கேட்க வேண்டிய எடப்பாடி அரசு, வாயை மூடிக் கொண்டு தலையாட்டிப் பொம்மைபோல தலையை ஆட்டிக்கொண்டு இருப்ப தாக அவர் விமர்சித்தார்.
"மத்திய மோடி அரசுக்கு எடுபிடியாக செயல்படும் எடப்பாடி அரசை மாநிலத்தில் இருந்தும், ஒட்டு மொத்த இந்தியாவை பின்னோக்கிக் கொண்டு வந்து கற்கால அரசியல் செய்து வரும் பிரதமர் மோடி அரசை டெல்லியில் இருந்தும் ஒழித்து, ஓரம் கட்ட வேண்டும். இந்த இரண்டு அரசையும் வீழ்த்தும் சக்திகளைச் செயல்படுத்த மாநில மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது," என்றார் பாலகிருஷ்ணன்.
மத்திய மாநில அரசுக ளைக் கண்டித்து வரும் ஏப்ரல் மாதத்தில் பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக மாநில மாநாட்டில் தமிழகத்தின் புதிய மாநிலச் செயலராக முன்னாள் எம்எல்ஏவான கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

