ஈரான் சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் எட்டு பேர் விடுவிப்பு

ஈரான் சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் எட்டு பேர் விடுவிப்பு

1 mins read

சென்னை: ஈரான் சிறையில் அடைபட்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டு பேர் விடுவிக்கப்பட்டனர். துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தமிழக மீனவர்கள் 15 பேர், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீன்பிடிக்கச் சென்ற போது, ஈரான் கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கைதாகினர். இதற்கான அபராதத் தொகையைச் செலுத்தாததால் 15 பேரும் விடுவிக்கப் படவில்லை. இந்நிலையில் இந்திய அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு துபாய் நிறுவனம் மூலமாக அபராதத் தொகையை செலுத்தியது. இதையடுத்து முதற்கட்டமாக 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஏற்கெனவே நாடு திரும்பிய நிலையில், மற்ற 8 பேரும் நேற்று முன்தினம் தமிழகம் வந்து சேர்ந்தனர்.