ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி காட்டி திமுகவினர் போராட்டம்

ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி காட்டி திமுகவினர் போராட்டம்

1 mins read
73d8107d-ad09-417c-94a4-2ea2480833a1
-
Google News Preferred Icon

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு ஆளுநர் காரில் சென்றபோது திமுகவினர் திரளாகத் திரண்டு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரி வித்தனர். மேலும் ஆளுநர் உடனடியாக திரும்பிச் செல்ல வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் பல்கலைக்கழகம் செல்லும் பாதையில் பரபரப்பு நிலவியது. படம்: தமிழக ஊடகம்