ஓரணியாகத் திரள்வோம்: முதல்வர் பழனிசாமி அழைப்பு

ஓரணியாகத் திரள்வோம்: முதல்வர் பழனிசாமி அழைப்பு

1 mins read
f61dfbfa-2ffe-438b-a077-178aea43cbf1
-

சென்னை: காவிரி நதிநீர்ப் பிரச் சினை, காவிரி டெல்டா விவசாயி களின் வாழ்வாதார பிரச்சினையாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்து இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடுகள் இருந் தாலும் அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு குறித்த விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசியபோது அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக அரசு ஏற்பாடு செய்தி ருந்த இந்தக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந் தது. கூட்டத்தில் முக்கிய கட்சிக ளான திமுக, காங்கிரஸ், இடது சாரிக் கட்சிகள், பாமக, தேமுதிக, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவை கலந்துகொண்டன. "முக்கியமான பிரச்சினையில், பல் வேறு கருத்து வேறுபாடுகள் நம்மி டையே இருந்தாலும், அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாட்டு மக்க ளுக்காக ஓரணியில் திரள வேண்டும். ஒருமித்த கருத்துடன் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு பாடுபட வேண்டும்," என்றார் முதல்வர் பழனிசாமி.