சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளான இன்று, வேலை செய்யும் பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் அம லுக்குக் கொண்டு வரப்படுகிறது. ஓராண்டில் ஒரு லட்சம் பெண் களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. இன்று மாலை 5 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் திட்டத்தின் தொடக்க விழா நடை பெறுகிறது. பிரதமர் மோடி விழாவை துவக்கி வைக்கிறார். இந்த விழா வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் போலிசார் குவிக்கப் பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பத்து கம்பெனி சிறப்பு போலிஸ் படையினரும் கண்காணித்து வரு கிறார்கள். ஸ்கூட்டர் வழங்கும் விழா முடிவடைந்ததும் அங்கிருந்து நேராக கிண்டி ஆளுநர் மாளி கைக்குச் செல்லும் மோடி இன்று இரவு அங்கு தங்குகிறார். நாளை புதுச்சேரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை இரவே சென்னை திரும்பும் மோடி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி புதுவையிலும் பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டுள்ளது.
மானிய விலையில் வழங்கப்பட இருக்கும் ஸ்கூட்டர்கள் சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஹோண்டா நிறுவனத்தின் பல்வேறுவிதமான ஸ்கூட்டர்களும் அவற்றில் உள்ளன. படம்: தமிழக ஊடகம்

