இந்து சமய துரோகி கமல்: பாஜக

இந்து சமய துரோகி கமல்: பாஜக

1 mins read

சென்னை: நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து ஆரம்பத்திலிருந்தே தனது டுவிட்டரில் கடுமையான கருத்து களை கூறிவரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீண்டும் தாக்குதல் கணை தொடுத்துள்ளார். செய்தியாளர் களிடம் பேசிய அவர், "ராமேசுவரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த மீனவர்களின் பிரச்சினைகளை பொறுமையோடு கேட்டு விவாதிக்க மனமில்லாமல் சென்றவர்தான் கமல்.

"அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்றவருக்கு அங்கு இருக் கும் அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்லக்கூட நேரமில்லை. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்க வேண் டும் என்பதற்காகவே பரமக்குடி, மானாமதுரை மக்களை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டார். ஆன்மீக இடமான ராமேசு வரத்திற்குச் சென்று இறைவனைக்கூட வழிபாடு செய்யாத கமல் ஓர் இந்து துரோகி. இருந்தாலும் புதியதாக கட்சி துவங்கியுள்ள அவருக்கு என் வாழ்த்துகள்," என்று தெரிவித் துள்ளார்.