சென்னை: ஏர்செல் கைபேசிச் சேவையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் பெரும்பாலான கைபேசி கோபுரங்கள் செயலிழந்த தால் சிக்னல் கிடைக்காமல் ஏர்செல் சேவை முற்றிலும் முடங் கியது. இதனால் அந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தியவர்கள் கைபேசி மூலம் மற்றவர்களிடம் பேச முடியாமல் பரிதவித்தனர். முக்கிய மற்றும் அவசர தக வல்களைத் தெரிவிக்க முடியாமல் அவர்கள் கடும் அவதிக்குள்ளா கினர். ஏர்செல் மூலம் இணையத் தளத்தைப் பயன்படுத்தி வேலை செய்து வந்தவர்களும் பாதிக்கப்பட் டனர்.
இணையத்தள பயன்பாட்டுக்கு முன்கூட்டியே பணம் கட்டியவர் களும் ஏர்செல் சிம் கார்டு பயன் படுத்துபவர்களும் வாடிக்கையாளர் மையத்துக்குச் சென்று ஊழியர் களுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, கன்னியாகுமாரி உட்பட தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவை மையத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள ஏர்செல் சேவை மையத்தின் முன்பு வாடிக்கையாளர்கள் மறியல் செய் தனர்.
கைபேசிச் சேவை கிடைக் காததால் ஏர்செல் சேவை மையங்களை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள். தமிழகம் முழுவதும் ஏராள மானோர் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் ஏர்செல் சேவை தொடரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம்

