மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் தொடர்பில் சர்ச்சை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் தொடர்பில் சர்ச்சை

1 mins read
b138b42f-8de2-4576-bda3-3124c7f7f8b6
-

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி சின்னத்தின் வடிவம் வேறொரு அமைப்பிலிருந்து காப்பி யடிக்கப்பட்டதாக புதிய சர்ச்சை பரவி வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சிக் கொடியில் உள்ள ஆறு கைகள், ஆறு தென்மாநிலங்களைக் குறிக் கும் என விளக்கமளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சின்னம் அறி முகம் செய்தபோது அதில் தாமரை, பாம்பு ஆகியன இடம்பெற்றிருந்தன. இதற்குப் பலரும் கருத்து கூறினர். எங்கிருந்து அவை காப்பியடிக்கப் பட்டன என்பதை இணையவாசிகள் ஆதாரபூர்வமாக வெளியிட்டனர்.

இதனையடுத்து தாமரை, பாம்பு படங்களை நீக்கி விட்டு இப்போது பாபா சின்னம் மட்டுமே ரஜினியின் சின்னமாக உள்ளது. கமலின் கட்சி, கொடி சின்னத்தையும் காப்பி என்று தற்போது பதிவிட்டு வருகின்றனர். மும்பை தமிழர் பாசறையின் கொடியில் இருந்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக் கொடி காப்பி யடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத் தளங்களில் விமர்சித்து வருகின் றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக் கொடியிலுள்ள சின்னமும் (வலது) தமிழர் பாசறை என்னும் அமைப்பின் சின்னமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. படம்: தமிழக ஊடகம்