சென்னை: சென்னை நகரில் குண்டுவெடிப்பு நிகழ்த்தி தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி உள்ளிட்ட மூவர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐ எனப்படும் பாகிஸ் தான் உளவு நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை உளவு பார்ப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ)க்கு ரகசியத் தகவல்கள் சென்றன. அவற்றின் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், இலங் கையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் துணி வியாபாரி எனக் கூறிக் கொண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகம், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், முக்கியமான வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் கடற்கரை, வணிக மையங்கள் ஆகியவற்றை உளவுபார்த்து புகைப்படம் எடுத்து ஐஎஸ்ஐக்கு அனுப்பி வருவது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ அதி காரிகள் சென்னை திருவல்லிக் கேணியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த ஜாகிர் உசேனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், வியாசர்பாடியைச் சேர்ந்த ரஃபீக் என்ற நூருதீன், முகம்மது சலீம், சிவபாலன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப் பட்டனர்.

