இனவெறிச் செயல்: வேல்முருகன் புகார்

1 mins read
25d44468-b05f-4150-aef6-04b220bf47cb
-

சென்னை: கேரளாவின் சித்தூர் தொகுதி எம்எல்ஏவான கிருஷ்ண குட்டி, தமிழர்களின் அடிப்படை வாழ்வாதார விஷயங்களை முடக்கி பாதிப்புகளை ஏற்படுத்துவ தையே தமது நோக்கமாகக் கொண்டிருக்கிறார் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கேரளாவின் மூலத் தரா அணையிலிருந்து தமிழ் விவ சாயிகளுக்கு மட்டும் தண்ணீர் கிடைக்காதபடி கிருஷ்ணகுட்டி செயல்படுவதாக அவர் குறிப்பிட் டுள்ளார்.

"இப்போது கற்பனையான, பொய்யான ஒரு குற்றச்சாட்டை உருவாக்கி அதை வைத்து தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்திருக்கிறார். "ஒப்பந்தப்படியான நடைமுறை அதாவது பரம்பிகுளம் -ஆழியாறு திட்ட ஒப்பந்தப்படியான நீரை கேர ளாவுக்குத் தமிழகம் தருவதில்லை என்று பொய் கூறி தனது ஆதரவாளர்களைத் தமிழர்களுக்கு எதிராகத் தூண்டி விட்டிருக்கிறார்," என்று வேல்முருகன் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழக வாகனங்களைத் தாக்கி கேரளாவுக்குள் செல்லவிடா மல் திட்டமிட்டு, இனவெறிச் செய லில் ஈடுபட்டிருக்கும் கிருஷ்ண குட்டி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இனவெறிச்செயல் இனியும் தொடராதபடி தமிழக, கேரள அரசு கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேல் முருகன் வலியுறுத்தி உள்ளார்.