களைகட்டியது கச்சத்தீவு ஆலயத் திருவிழா

களைகட்டியது கச்சத்தீவு ஆலயத் திருவிழா

1 mins read
d883a7ba-06e7-4c7b-9e79-8a3216344335
-

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா, நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய ராமேசுவர மீனவர்கள் கொண்டு வந்த 40 அடி உயரம் தேக்குக் கொடிமரத்தில், நெடுந்தீவு பங்குத்தந்தை 'எமில் பால்' கொடியினை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பக்தர்களும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தலைமன்னார் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த இலங்கை பக்தர்களும் கலந்து கொண்டனர். படம்: தகவல் ஊடகம்