சென்னை: ஆறு எம்எல்ஏக்களைத் தவிர, மற்ற அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் அனைவ ருமே தனக்கு ஆதரவாக அணி திரள்வார்கள் என ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினக ரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி தற்போது ஆட்டம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பு தங்கள் அணிக்குச் சாதகமாக வரும் என்றும், எடப்பாடி அணி யின் செங்கற்கள் ஒவ்வொன்றாக உருவப்படும் என்றும் அவர் கூறினார்.
"எங்களுக்கு அதிமுக தொண்டர்களின் செல்வாக்கு இல்லை என ஒதுக்கினர். ஆனால் தற்போது 90 விழுக்காடு தொண் டர்கள் எங்களிடம்தான் உள்ளனர். "எங்கள் பக்கம் வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, நீண்ட நாட்களாகவே என்னுடன் தொடர்பில் உள்ளார். அவரது மனநிலையே அனைத்து உறுப்பி னர்களுக்கும் உள்ளது.

