புதுக்கோட்டையில் நக்சல் தடுப்புப் பிரிவு போலிசார் அதிரடி நடவடிக்கை

புதுக்கோட்டையில் நக்சல் தடுப்புப் பிரிவு போலிசார் அதிரடி நடவடிக்கை

1 mins read
Google News Preferred Icon

புதுக்கோட்டை: அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று நக்ச லைட்டுகளிடம் புதுக்கோட்டை போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில் மூவரும் தங்கியிருந்த வீட் டில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நக்சலைட் டுகள் நடமாட்டத்தை ஒடுக்கும் வகையில் போலிசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி திருவள்ளூர் அருகே உள்ள பூண்டியில் வைத்து மூன்று நக்சலைட்டுகளை போலிசார் கைது செய்தனர். பூண்டி கிராமத்தில் வசிக்கும் வெற்றி வீரபாண்டியன் என்பவரது வீட்டில் நக்சலைட்டுகள் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலிசார் அங்கு சென்று விசா ரணை நடத்தினர். அப்போது வீரபாண்டியனின் சகோதரர் தசரதன் (36 வயது) தனது மனைவி செண்பகவல்லி யுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூவரும் கைதாகினர். அவர்களிடம் நடத் தப்பட்ட விசாரணையில் புதுக் கோட்டை அருகே உள்ள கோவில் பட்டியில் கடந்த மூன்று மாதங்க ளாகத் தங்கி இருந்தது தெரிய வந்தது.