குமரி: குழந்தைகள், வயதான பெண்கள் வசிக்கும் வீடுகளை மட்டும் குறிவைத்து கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதால் கேர ளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. குழந்தைக் கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாகவும், குழந் தைகள் உள்ள வீடுகளை அடையா ளம் காணவே கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாகவும் பரவியுள்ள தகவலால் அம்மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கண்ணில் சிக்கும் வடமாநில இளையர்களை யும், சந்தேகப் பேர்வழிகளையும் குமரி மக்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
சில தினங்களுக்கு முன்பு கேரளாவின் சில பகுதிகளிலும் கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இது குழந்தை கடத்தும் கும்பலின் கைவரிசை எனக் கூறப்பட்டது. இது குறித்து அம்மாநில போலிசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத் தின் மேற்கு கடற்கரை கிராமங்க ளில் உள்ள சில வீடுகளில் கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இது போல கன்னியாகுமரி, குளச்சல், கோடிமுனை, வாணியக்குடி உள் ளிட்ட கிராமங்களிலும் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதையடுத்து குமரி போலிசார் கண்காணிப்புப் பணியைத் தீவிரப் படுத்தி உள்ளனர். இந்நிலையில் குளச்சல் பகுதியில் சாக்குப் பையு டன் வலம் வந்த ஒருவரை பொது மக்கள் சந்தேகத்தின் பேரில் விசா ரித்தனர்.
அவரை சிலர் சரமாரியா கத் தாக்கவும் செய்தனர். போலிஸ் விசாரணையில் அவர் ஒரு வியாபாரி எனத் தெரிய வந்தது. இதுபோல மேல மணக்குடி கிராமத்தில் சந்தேகப்படும்படி நின்ற வட மாநில பெண் உள்பட 3 பேரை கிராம மக்கள் பிடித்து விசாரித்தனர். அவர்களின் பேச் சும் நடவடிக்கையும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர்களை கம் பத்தில் கட்டி வைத்து உதைத்தனர். உதய மார்த்தாண்டம், கருங் கல், வாணியக்குடி போன்ற ஊர் களிலும் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. நேற்று குளச்சல் அருகே கோடிமுனை மீனவ கிராமத்தில் வடமாநில பெண் ஒருவரும் தாக்கப்பட்டார். இந்நிலையில், கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள தாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
கோடிமுனை கிராமத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்ட வட மாநில பெண். படம்: தமிழகத் தகவல் ஊடகம்

