கெஜ்ரிவால் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றவில்லை

கெஜ்ரிவால் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றவில்லை

1 mins read

சென்னை: லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனப் போராடியதன் காரணமாகவே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் முதல்வரான பின், இதுவரை அந்தச் சட்டத்தை நிறைவேற்ற கெஜ்ரிவால் குரல் கொடுக்கவில்லை என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சுட்டிக்காட்டினார். "இத்தகைய சூழலில் திமுக ஊழல் கட்சி என்கிறார் கெஜ்ரி வால். இதை ஏற்க இயலாது," என்றும் ஸ்டாலின் கூறினார்.