ஓபிஎஸ்தி-னகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல்

1 mins read
266eb1e8-537a-434a-9452-f9f6a37e0668
-

மதுரை: துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், தினகரன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்ததால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதையடுத்து காவல்துறையி னர் லேசான தடியடி நடத்தி இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்பு றப்படுத்தினர். பின்னர் அங்கு கூடுதல் போலிசார் குவிக்கப் பட்டனர்.

நேற்று மதியம் துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத் தில் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை வழியனுப்ப ஆதரவாளர் கள் பலர் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் தினகரனும் சென்னை செல்வதாக வெளியான தகவலையடுத்து, அவரது ஆதர வாளர்களும் விமான நிலையத்தில் குவிந்தனர்.

விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு நிகழ்ந்தது. படம்: ஊடகம்