குடிநீர் விநியோகம் பாதிப்பு: மக்கள் மறியல்

குடிநீர் விநியோகம் பாதிப்பு: மக்கள் மறியல்

1 mins read
8c08eca8-5da9-4a85-8f1f-56b60b2318d0
-
Google News Preferred Icon

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது வீரப் பட்டி கிராமம். இங்குள்ள ஒரு சாலையில் நிறுவப்பட்ட இரு மின்கம்பங்கள் பழுதாகிவிட்டன. இதனால் மின்சாரம் தடைபட்டு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக் காத மின்வாரியத்தைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை மணப்பாறை சாலை யில் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. படம்: தகவல் ஊடகம்