தினகரன்: உண்மையான மக்கள் அரசை நிறுவுவோம்

தினகரன்: உண்மையான மக்கள் அரசை நிறுவுவோம்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் தற்போது அடிமைத்தன அரசியலும், அடிமைத்தன ஆட்சியும் நடந்து கொண்டிருப்பதாக ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன் விமர்சித்துள்ளார். துரோகிகள் கூட்டத்தின் பிடியில் அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் இருக்க வேண்டும் என்பதே டெல்லியின் விருப்பமாக உள்ளது என்று அவர் தமது ஆதரவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். "காலஞ்சென்ற ஜெயலலிதாவின் ஆட்சியில், தமிழகம் என்றாலே மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது. இன்றோ, அத்தனை சிறப்புகளையும் இழந்து, துரோகம் புரிவதை மட்டுமே மூலதனமாகக் கொண்ட கொடிய கூட்டம், கட்சியின் சிறப்பை தங்க ளின் சுய நலனுக்காகவும், பதவி ஆசைக்காகவும் டெல்லியிடம் அடிமை சாசனமாக எழுதிக் கொடுத்துவிட்டது," என்று தினகரன் தெரிவித்துள் ளார்.