மோசடி; நீரவ் மோடியின் கடவுச்சீட்டு முடக்கம்

மோசடி; நீரவ் மோடியின் கடவுச்சீட்டு முடக்கம்

1 mins read
b7ea9c5a-d678-4ce8-9622-023ce9f31e93
-

புதுடெல்லி: பஞ்சாப் நே ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.11,700 கோடிக்கு கடன்பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரியான நீரவ் மோடியின் கடவுச் சீட்டை வெளியுறவு அமைச்சு முடக்கியுள்ளது. இவரது தொழில் கூட்டாளியும் உறவினருமான மெகுல் சோக்‌ஷி யின் கடவுச் சீட்டையும் முடக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கி மோசடி தகவல் வெளியாவதற்கு முன்பாகவே நீரவ் மோடியும் மெகுல் சோக் ‌ஷியும் வெளிநாடு தப்பிவிட்டனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் கைது செய்யவும் இரு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வரு கின்றன. இந்த நிலையில் இருவரின் கடவுச் சீட்டுகளை முடக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சுக்கு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இருவரின் கடவுச்சீட்டுகளை இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து நான்கு வாரத்துக்கு ரத்து செய்யப்பட்டது.

வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நீரவ் மோடி. கோப்புப் படம்