புதுச்சேரி சுற்றுலா மையமாக மாறும்

புதுச்சேரி சுற்றுலா மையமாக மாறும்

2 mins read
39a8bb5b-a18a-42ab-ac66-2bd310a4a36d
-

புதுச்சேரி: இந்தியாவை 48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங் கிரஸ் கட்சி இந்த நாட்டிற்கு என்ன செய்தது என்று கேள்வி யெழுப்பிய பிரதமர் மோடி, 48 மாதங்களில் பாரதிய ஜனதா அரசு பல்வேறு சாதனைகளைச் செய்துள் ளது," என்றார். புதுவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். "சித்தர்களும் தெய்வீக மனிதர் களும் வாழ்ந்த புண்ணிய பூமியான புதுச்சேரிக்கு வந்ததை நான் புண்ணியமாகக் கருதுகிறேன். "இங்கு வாழும் மக்களும் பாக்கியசாலிகள். அரவிந்தருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்," என்று திரு மோடி குறிப்பிட்டார். "ஆனால் இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மண்ணிற்கு அநியாயம் இழைத்துள்ளனர். இங்கு வளர்ச்சிக்குத் தடை ஏற் பட்டுள்ளது. விடுதலை பெற்றது முதல் புதுச்சேரி இன்னமும் முன் னேறாமல் உள்ளது," என்றார் அவர்.

"இந்தியாவை ஆளும் நாங்கள் 48 மாதங்களை நிறைவு செய்யப் போகிறோம். இந்த 48 மாதங்களில் நாங்கள் செய்ததை எண்ணிப் பாருங்கள். இதற்கு முன்பு ஆட்சி யிலிருந்த காங்கிரசுடன் எங்கள் ஆட்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். நாட்டை 48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரசார் என்ன செய்த னர் என்று எண்ணிப் பாருங்கள்," திரு மோடி சொன்னார். "புதுச்சேரி முதல்வர் நாராய ணசாமிக்கு வாழ்த்துச் சொல்லிக்கொள்கிறேன். வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி வீட்டுக்குப் போகும். கர்நாடகாவில் காங்கிரஸ் வீட்டுக்குப் போகும். காங்கிரஸ் அடையாளம் காட்டு வதற்கு புதுச்சேரி முதல்வர் மட்டுமே இருப்பார்," என்று கூறிய பிரதமர், புதுச்சேரி மாநிலத்துக்கு பாஜக அரசு செய்து வரும் திட்டங் களைப் பட்டியலிட்டார். "புதுச்சேரியை அறிவார்ந்த நகரங்களின் பட்டியலில் சேர்த்துள் ளோம். 1,800 கோடி ரூபாய் புதுச் சேரிக்குச் செலவழிக்கப்படும். சுற்றுலா, போக்குவரத்து, அரசு சேவை நவீனப்படுத்தப்படும். குடி நீர் தேவைக்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். ஜிப்மர் மருத்துவமனையை நவீனப் படுத்த 450 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.

"கடற்கரையை நவீனப்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது. இதன் மூலம் புதுச்சேரி சுற்றுலா மையமாக மாறும். பிணை இல்லாமல் இளைஞர்களுக்குக் கடன் வழங்கியுள்ளோம். இளை ஞர்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும். இரண்டு லட்சம் பேருக்குப் புதுச்சேரியில் மருத்து வம் மற்றும் விபத்துக் காப்பீடு செய்துள்ளோம்," என்று மோடி தெரிவித்தார்.

புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி. அம்மாநில முதல்வர் நாராயணசாமி (இடமிருந்து 2வது) உடன் உள்ளார். படம்: இந்திய ஊடகம்