நடிகர் கமல்ஹாசன் தொடங்கி உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர இணையத்தளத்தில் இருநூறாயிரம் பேர் விண்ணப்பித் துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை கடந்த 21ஆம் தேதி கமல் தொடங்கினார். இந்தக் கட்சிக்காக மய்யம்.காம் (www.maiam.com) என்ற அதி காரபூர்வ இணையத்தளம் தொடங் கப்பட்டது. கட்சியில் சேர விரும்புவோர் இந்த இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கும்படி கமல் அழைப்பு விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, அரபு நாடுகள், சிங்கப்பூர், இங் கிலாந்து, மலேசியா, சவூதி அரே பியா, கனடா ஆகிய நாடுகளில் வசிப்போர் மய்யம் இணையத்தளம் மூலம் கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சி தொடங்கப்பட்ட 2வது நாளில் எடுக்கப்பட்ட ஆய்வு முடி வில் மய்யம் இணையத்தளத்தை 832,864 பேர் பார்வையிட்டுள்ள தும் 201,597 பேர் கட்சியில் உறுப்பினராகச் சேர விண்ணப்பித் திருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, தசாவதாரம், விஸ்வரூபம் படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய தமக்கு கமல் இன்னும் சம்பளம் தரவில்லை என்றும் கமலுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நடிகை கௌதமி கூறியுள்ளார்.

