உலகத் தமிழர்களின் ஆய்வு பயன்பாட்டுக்காக எழுபது அரிய தமிழ் நூல்கள் மின்மயம்: தமிழக அரசு ஏற்பாடு

உலகத் தமிழர்களின் ஆய்வு பயன்பாட்டுக்காக எழுபது அரிய தமிழ் நூல்கள் மின்மயம்: தமிழக அரசு ஏற்பாடு

2 mins read

எளிதில் காணக்கிடைக்காத அரிய தமிழ் நூல்களை மின் மயமாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள் ளார். சென்னை அருகே தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற திரு பாண்டியராஜன், பழமையான 70 அரிய நூல்களை வெளியிட்டுப் பேசினார். "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிறுவனத்தில் 70 நாட்கள் விழா எடுக்கப் படுகிறது. "அதன் முக்கிய நிகழ்வாக 1834ஆம் ஆண்டு முதல் 1935ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அச்சிடப்பட்ட 70 அரிய நூல்கள் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளன. "இவை அனைத்தும் தமிழ் ஆய்வுக்கு பயன்படக்கூடிய நூல் களாகும். இவற்றை உலகத் தமி ழர்கள் அனைவருக்கும் கிடைக் கும் வகையில் மின்மயமாக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

"பல அறிஞர்களின் படைப்பு களை அரசுடைமையாக்க ஜெய லலிதா நடவடிக்கை எடுத்தார். இந்த ஆண்டு ஐந்து அறிஞர் களின் படைப்புகளை அரசுடைமை யாக்குவது தொடர்பாக விரைவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பார். "கோல்கத்தாவில் தொடங்கிய புத்தகக் கண்காட்சி கலாசாரம் தமிழகத்தில் மட்டுமே வேரூன்றி யுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் பிரபலம் அடையவில்லை. "சென்னை புத்தகக் கண் காட்சியில் ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள் ளன. "அடுத்த கண்காட்சியில் விற் பனையை ரூ.50 கோடியாக உயர்த்துவதற்கான உத்திகளை வகுத்துக்கொண்டு இருக்கின்ற னர். அதிக அளவில் புத்தகங்கள் விற்பனையாகும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. "தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தது 10 ஆயிரம் நூல்கள் வெளிவருகின்றன. அதில் 10 விழுக்காடு மட்டுமே ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையா கின்றன.