போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பம்

போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பம்

1 mins read
b950f269-df7b-4faa-92da-0486af14d085
-
Google News Preferred Icon

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியையும் விஜயவாடாவையும் இணைக்கும் 'ஹைப்பர் லூப்' போக்குவரத்து வசதியை (படம்) ஏற்படுத்த ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வசதி மூலம் ரயில் இணைக்கப்பட்டால் இரு நகரங்களுக்கு இடையிலான 40 கிலோ மீட்டர் தூரத்தை ஆறே நிமிடங்களில் எட்டிவிடலாம். இதுகுறித்து ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில் நுட்பத்தின் தலைவர் பிபோப் கிரேஸ்டா விசாகப்பட்டினத் தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டின் போக்குவரத்து முறையில் லூப் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்," என்று தெரிவித்தார்.