புதுடெல்லி: டெல்லியில் கார் திரு டர்களைப் பிடிக்கும் முயற்சியில் அவர்களைத் துரத்திச்சென்ற 25 வயது இளையர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மகனுடன் உதவிக் குச் சென்ற தந்தை படுகாயம் அடைந்து எய்ம்ஸ் மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தனது உறவினரின் காரைத் திருடிச் செல்ல முயற்சி செய்வதைப் பார்த்த இவர்கள் அதைத் தடுக்க முயன்றபோது உயிரிழந்தனர்.
டெல்லியின் ஜெய்த்பூர் பகுதி யில் காருடன் தப்ப முயன்ற திருடர்களைத் துரத்திப் பிடிக்க சென்ற வாலிபர் உயிரி ழந்தார். இறந்தவரின் பெயர் விஷால் என்றும் அவர் ஒரு கைப்பேசி கடையில் பணிபுரிந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. பிற்பகல் 3.30 மணி அளவில் விஷாலின் மூத்த சகோதரர், 27 வயது ரோகித் அவரது அறையில் அம்ர்ந்து படித்துக் கொண்டிருந் தார். அப்போது கண்ணாடிகள் உடைந்து சிதறுவதுபோல் சத்தம் கேட்டது.
கார் திருடர்களைப் பிடிக்கச் சென்று விபத்தில் சிக்கி இறந்துபோன விஷாலின் குடும்ப உறுப்பினர்கள். உள்படம்: விஷால். படம்: ஊடகம்

