ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது இரு பெண்கள் உள்பட நான்கு நக்ச லைட்டுகள் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் இருந்து இரு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடு படும் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினரும் காவல் துறையினரும் அடங்கிய கூட்டுப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது பல நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், பாலமு மாவட்டம் நவ்திகா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதியை மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்களும், மாநில காவல்துறை யினரும் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படை யினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்தது. சண்டை முடிவடைந்த பின்னர் நடந்த தேடுதல் வேட்டையின்போது இவர்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

